தினகரன்: 200 தொகுதிகளில் வெற்றி உறுதி

தினகரன்: 200 தொகுதிகளில் வெற்றி உறுதி

1 mins read
1cf76380-deb5-4559-82ed-9577ba4be069
-

சென்னை: தகுதி நீக்கம் செய்யப் பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரும் கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் என்றும் அவர்கள் சபரிமலையில் உள்ள 18 படிக் கட்டுகளைப் போன்றவர்கள் என் றும் அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் கடும் அதி ருப்தியில் இருப்பதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் திருவாரூரில் செய்தியாளர் களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

இன்னும், ஓராண்டில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன், தமி ழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அத்தேர்தலில் அமமுக இருநூறு தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். "தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து துரோ கம் இழைத்து வருகின்றன. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியைப் போல் ஒரு மோசமான முதல்வர் நாட்டிலேயே இல்லை என்று கூறலாம். அமமுகவின் தலைமையை ஏற்று வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்