பெ.மணியரசன் மீது தாக்குதல்: தஞ்சையில் பரபரப்பு

பெ.மணியரசன் மீது தாக்குதல்: தஞ்சையில் பரபரப்பு

1 mins read
6e3554fe-7248-44ce-ac4c-45a63e60fd24
-

தஞ்சை: காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் பெ. மணியர சன் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவருமான அவர் நேற்று முன்தினம் இரவு தனது உதவியாளரின் இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவர் மணியரசனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரைத் தாக்கிய இருவரும் பின்னர் வேகமாகத் தப்பி ஓடினர். இந்தச் சம்பவத்தில் மணியரசனுக்குக் கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட் டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்