நாமக்கல்: நித்தியானந்தா பீடத்துக்குச் சென்ற தனது மனைவியைக் காணவில்லை என்று நாமக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். தனது மனைவி உயிரோடு இருக்கிறாரா எனத் தெரியவில்லை என்றும் அவரை மீட்கவேண்டும் என்றும் தமது மனுவில் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். "பல இடங்களில் கடன் பெற்ற என் மனைவி, நித்தியானந்தா நடத்திய 21 நாள் தியான வகுப்பு சென்று அப்பணத்தைச் செலவு செய்துவிட்டார். இதனால் கடந்த 8 மாதமாக கடன் தொல்லையாலும் உணவின்றியும் மன உளைச்சலில் உள்ளேன். "எனவே என் மனைவியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரை மீட்டு வந்து கடனைத்திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நித்யானந்தா பீடம் சென்ற மனைவி மாயம்: கணவர் புகார்
1 mins read

