அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு புகார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு புகார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 mins read

சிவகங்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் மீதான சொத்துக்குவிப்புப் புகாரை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையான செய்தி படிக்க