'கைதாக வேண்டிய எஸ்.வி.சேகருக்கு போலிஸ் பாதுகாப்பா?'

'கைதாக வேண்டிய எஸ்.வி.சேகருக்கு போலிஸ் பாதுகாப்பா?'

1 mins read

சென்னை: எஸ்.வி. சேகர் விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் நேற்று பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். பெண் செய்தியாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை பதிவிட்டார் என்பது எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு. இதையடுத்து பல்வேறு தரப்பி னரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையும் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. எனி னும் அவர் கைது செய்யப்பட வில்லை. இதுகுறித்து நேற்று பேரவையில் கேள்வி எழுப்பினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்.

"எஸ்.வி. சேகரைக் கைது செய்யத் தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் அவர் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய போது, இவ்விவகாரம் குறித்துப் பேரவையில் விவாதிக்க அனுமதி இல்லை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

இதற்கிடையே போலிசாரால் எஸ்.வி. சேகர் தீவிரமாகத் தேடப் பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் எஸ்.வி. சேகர் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு காணொளியும், சில புகைப்படங் களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித் துள்ளனர். தனியார் உணவகம் முன் தனது காரை நிறுத்தி எஸ்.வி. சேகர் உள்ளே செல்வதும், அவ ருடன் துப்பாக்கி ஏந்திய போலி சார் இருவர் இருப்பதும் காணொ ளியில் பதிவாகி உள்ளது. இதையடுத்து காவல்துறை பல ரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு