தகுதிநீக்க வழக்கில் இரு வேறு தீர்ப்பு

தகுதிநீக்க வழக்கில் இரு வேறு தீர்ப்பு

1 mins read

டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த நீதிபதிகள் இருவரும் ஆளுக்கொரு தீர்ப்பை வழங்கிய தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமை யிலான அரசு தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவினை அடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.

சசிகலா தரப்பு ஓர் அணியாகவும் இப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் இன்னொரு அணி யாகவும் அதிமுக உடைந்தது. ஓபிஎஸ் பக்கம் எம்எல்ஏக்கள் தாவிவிடாமல் இருக்க கூவத் தூர் சொகுசு விடுதியில் எம்எல் ஏக்களைத் தங்கவைத்த சசிகலா தரப்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவிற்கு நான்காண்டு சிறைத் தண்டனை கிடைத்ததால், கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார் எடப்பாடி.