புதுடெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற் றது முதல் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியில் நாடாளு மன்றத்தில் இதுவரை 19 முறை மட்டுமே பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளார். "பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர். ஆண்டுக்கு சராசரியாக நான்கு நாட்களில் நாடாளு மன்றத்தில் இருந்ததைவிட மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரசாரம் செய்து பேசியுள்ளார்," என்றும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி வழக்கு
1 mins read

