கால்நடைகள் திருடிய இருவர் கொலை

கால்நடைகள் திருடிய இருவர் கொலை

1 mins read

கோடா: ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடைகளைத் திருடிய இருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதுடன், அவர்களது உடலைச் சாலையில் இழுத்து வந்தனர். இதுதொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடா மாவட்டம், டுல்லு கிராமத்தில் முன்சி முர்மு என்பவரின் வீட்டில் கால்நடைகளைச் சிலர் திருடியுள்ளனர். கால்நடைகளைத் திருடிச் சென்றவர்களை பங்காட்டி என்ற கிராமத்தில் சிலர் அடையாளம் கண்டு தாக்கியுள்ளனர். ஐவர் மீதான தாக்குதலில் சிராபுதின் அன்சாரி, முர்டாசா அன்சாரி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பொதுமக்கள் சாலையில் இழுத்தும் கம்புகளில் கட்டித் தூக்கியும் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்