கோழிக்கோடு: வட பகுதி கேரளா வில் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங் களில் பலத்த மழை பெய்து வரு கிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்யூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். தொடர் மழையால் கோழிக் கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிர்கள் அடித்துச் செல் லப்பட்டன. வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 3 குழந் தைகள் உள்பட எழுவர் உயிரிழந்த னர். மேலும் 10 பேரைக் காணவில்லை.
இதையடுத்துச் சிறப்பு தேசிய பேரிடர் மீட்புப் படை யினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரைத் தீவிரமாக தேடி வரு கின்றனர். இது பற்றி அறிந்த முதலமைச் சர் பினராயி விஜயன் மீட்புப் பணிகளை விரைந்து செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

