'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியர் கொலை: சந்தேகப் பேர்வழிகளுக்கு வலைவீச்சு

'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியர் கொலை: சந்தேகப் பேர்வழிகளுக்கு வலைவீச்சு

1 mins read

ஸ்ரீநகர்: காஷ்மீர் பத்திரிகை ஆசி ரியரை சுட்டுக்கொன்றவர்களைப் பிடிக்க உதவுமாறு காஷ்மீர் போலிஸ் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் ‌ஷுஜாத் புகாரி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அவர் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சுடப்பட்டு இருக்கிறார். சரியாக இரவு 7 மணிக்கு அவர் பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் முதலில் அவரது பாதுகாவலர்களைத் துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் புகாரி சுடப் பட்டார்.