ராஜீவ் காந்தி கொலை: 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க அதிபர் மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை: 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க அதிபர் மறுப்பு

1 mins read

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஏழு பேரையும் விடுவிக்க அதிபர் கோவிந்த் மறுத்துவிட் டார். இதன் தொடர்பில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை அவர் நிரா கரித்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரும் 27 ஆண்டு களுக்கு மேலாக சிறையில் இருக் கின்றனர். இதனால் அவர்களை கருணை அடிப்படையில் விடு விக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் மனுவை அதிபர் நிராகரித் துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் கோவிந்த், "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. அதிபர் என்ற முறையில் அமைச்சின் ஆலோசனைப்படியே செயல்பட முடியும்," என்றார். "முன்னாள் பிரதமர் ஒருவரை படுகொலை செய்தவர்களை எந்தவொரு சூழ்நிலையிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடி யாது," என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்