வெளியேறும் ஆண்கள்; வெறிச்சோடும் தூத்துக்குடி கிராமங்கள்

வெளியேறும் ஆண்கள்; வெறிச்சோடும் தூத்துக்குடி கிராமங்கள்

1 mins read

சென்னை: தூத்துக்குடி கலவரத் தில் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் நபர்களை அடை யாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கைது நடவடிக் கைக்குப் பயந்து தூத்துக்குடி கிராமங்களில் உள்ள ஆண்கள் வெளியூர்களுக்குச் சென்று விட்டதாகவும், பல கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக வும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, கலவரத்தில் முடிந்தது. போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக போலிசார் இதுவரை 250 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கலவரத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு வருகிறது காவல்துறை. காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் வீரபாண்டியபுரம், மடத்தூர், பண்டாரம்பட்டி, சில்வர் புரம், தபால்தந்தி காலனி உள் ளிட்ட 15 கிராமங்களுக்குச் சென்று விசாரணைக்காகத் தின மும் பலரைப் போலிசார் அழைத்துச் செல்வதாகக் கூறப் படுகிறது. அவர்களில் சிலர் உட னுக்குடன் கைது செய்யப்படுகிறார் கள்.

மேலும் செய்திகளுக்கு