சண்முகம்: ஏழு பேரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்

1 mins read
a0615cb2-c3d7-45f2-a0ff-f60cda417134
-

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சி கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டத்துறை அமைச் சர் சி.வி. சண்முகம் தெரிவித் துள்ளார். 7 பேரின் கருணை மனுவை அதிபர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் சண்முகம், காலஞ்சென்ற முதல்வர் ஜெய லலிதா 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனும் நோக்கில் கருணை உள்ளத்துடன், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகச் சுட்டிக் காட்டினார்.

"ஏழு பேரை விடுதலை செய் வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள் ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துக்கூறும்.

சி.வி.சண்முகம். படம்: ஊடகம்

மேலும் செய்திகளுக்கு