சென்னையில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் மாநகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. சென்னையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை பெய்யவில்லை. இதனால் சென்னையில் அதிக வெப்பம் நிலவியது. தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 6ஆம் தேதி சென்னையில் திடீர் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து 8 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சென்னையில் மீண்டும் மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மாதவரம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. படம்: தமிழக தகவல் ஊடகம்
எட்டு நாட்களுக்குப் பிறகு பெய்த மழை - சென்னைவாசிகள் மகிழ்ச்சி
1 mins read
-

