கடம்பூர் ராஜு: ஏழு பேர் விடுதலை குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை

கடம்பூர் ராஜு: ஏழு பேர் விடுதலை குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை

1 mins read

கோவில்பட்டி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுதலை செய்யமுடியாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை சட்டச் சிக்கல்களின்றி விடுதலை செய்யவேண்டும் என்ற கொள்கை முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார். "ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பினார் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அச்சமயம் மத்திய அரசு தாமதம் செய்த காரணத்தால் ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியவில்லை. "தற்போது சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்," என்றார் கடம்பூர் ராஜு.

மேலும் செய்திகள்