சேலம்: காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று நடிகர் கமல் முதலில் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறவே மறந்துவிட்டதாக சாடினார். "கபினி அணை நிறைந்து விட்டதால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வரோ, இந்த மாதம் காவிரியில் இருந்து தமிழ கத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதில் எந்தவித பிரச்சினை யும் இல்லை என உலகமகா நகைச்சுவை செய்கிறார். "அதற்கு நடிகர் கமல்ஹாசனும் கர்நாடக முதல்வருக்கு நன்றி சொல்கிறார். கமல்ஹாசன் தனக்குத் தெரியாத வேலையைச் செய்யக்கூடாது," என்றார் முத்தரசன்.
எதையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும்: கமல்ஹாசனுக்கு முத்தரசன் அறிவுரை
1 mins read
-

