சென்னை: யாராக இருந்தாலும் ஒரு வரைமுறையோடு பேசுவதுதான் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அதை ஏற்க இயலாது என்றார். சென்னை -சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனி னும் சில தரப்பினர் இத்திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திரைப்பட நடிகர் மன்சூர் அலி கான் இத்திட்டத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகை யில் பேசியதாகப் புகார் எழுந் துள்ளது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் போலிசார் அவரை அதிகாலை வேளையில் கைது செய்துள்ளனர். இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கை கால்களை வெட்டுவேன், குத்திவிடுவேன், கொலை செய்வேன் என்கிற ரீதியில் பேசுவது மிகவும் தவறு என்றார்.
வரைமுறையோடு பேச வேண்டும்; இல்லையேல் சிறை: ஜெயக்குமார்
1 mins read
-

