நேரில் முன்னிலையாக வேண்டும்: எஸ்.வி.சேகருக்கு உத்தரவு

நேரில் முன்னிலையாக வேண்டும்: எஸ்.வி.சேகருக்கு உத்தரவு

1 mins read

நெல்லை: பெண் செய்தியாளர்கள் குறித்து சமூக ஊடகப் பக்கத்தில் அவதூறாகக் கருத்துப் பதிவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு எதிராக நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நெல்லை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது நேரில் முன்னிலையாக கால அவகாசம் வழங்க வேண்டும் என சேகர் தரப்பு கோரியது. இருதரப்பு வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி ஜூலை 12ஆம் தேதி சேகர் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்