நகைகளுடன் புது மனைவி ஓட்டம்

நகைகளுடன் புது மனைவி ஓட்டம்

1 mins read

சென்னை: திருமணமான ஒரு மாதத்துக்குள் புகுந்த வீட்டில் நகைகளைத் திருடித் தலைமறைவாகியுள்ளார் புதுமணப் பெண். சென்னையைச் சேர்ந்த 50 வயதான வெங்கட்ராமனுக்கும் 36 வயதான ரமணம்மாவுக்கும் கடந்த மே 2ஆம் தேதி திருமணமானது. தனக்கு உற்றார் உறவினர் யாருமில்லை என்று கூறிய புது மனைவியை நம்பி, அவருடன் வில்லிவாக்கத்தில் வசித்து வந்தார் வெங்கட்ராமன். இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வெங்கட்ராமன் மனைவியைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். கைபேசியிலும் ரமணம்மாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கமும் நகைகளும் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராமன், இது குறித்து போலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்