டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் பாதிப்பு

டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் பாதிப்பு

1 mins read
dfc792ac-3f52-4caf-9f8d-2fef7adb3c23
-

டீசல் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 61 நாள் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்த நிலையில் அப்பகுதி மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். டீசல் விலை தற்போது லிட்டருக்கு 73 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் ரூ.100,000 மதிப்புள்ள மீன்களைப் பிடித்து வந்தாலும் டீசலுக்கு ரூ.70 ஆயிரமும் மீனவர்களுக்கு ரூ.30 ஆயிரமும் போய்விடுவதால் தங்களுக்கு ஏதும் மிஞ்சுவதில்லை என விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகின்றனர். படம்: தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்