சென்னை: பட்டாக்கத்திகளுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்களை சென்னை போலிசார் கைது செய்தனர். மேலும் நீண்ட தலைமுடி யுடன் வந்த மாணவர்களை மடக்கிப் பிடித்து அவர்களின் முடியை அழகாக வெட்டவும் காவல்துறை ஏற்பாடு செய்து இருந்தது. இதனால் சென்னையில் கல் லூரிகள் அமைந்துள்ள பகுதி களில் பரபரப்பு நிலவியது. கோடை விடுமுறைக்குப் பிறகு சென்னையில் நேற்று கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாளன்றே சில மாணவர்கள் பேருந்துகளில் கலாட்டா செய்வது, சக பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பது என வழக்கமான அட்டகாசங்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கல்லூரி மாண வர்களின் செயல்பாட்டைக் கண் காணிக்குமாறு போலிசாருக்கு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் முன்பே உத்தரவிட் டிருந்தார். இதையடுத்து, மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்யும் பேருந்து வழித்தடங்களைக் கண் காணித்த போலிசார், ஆங்காங்கே சில பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டனர். குறிப்பிட்ட ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை போலிசார் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கச் செய்து சோதனையிட்டபோது, அவர்கள் தங்கள் பைகளுக்குள் பட்டாக்கத்திகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல் வேறொரு கல்லூரி யைச் சேர்ந்த மாணவர்களும் சிக்கினர். நிறைய மாணவர்களிடம் கத்திகள் இருந்தது போலிசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பாக சில மாண வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள். படம்: இணையம்

