சுகாதாரம் பேணும் உணவகங்களுக்கு விருது: புதிய திட்டம் 2020ல் அறிமுகம்

1 mins read

ரும் 2020ஆம் ஆண்டில் சிங் கப்பூரில் உள்ள உணவகங் களுக்குப் புதிய சுகாதாரத் தர முறையை தேசிய சுற்றுப்புற வாரியம் அறிமுகப்படுத்த உள் ளது. இந்தப் புதிய உணவு சுகாதார அங்கீகரிப்புத் திட்டம் உணவகங்கள் மேற்கொள்ளும் மதிப்புச் சான்றின் அடிப்படையில் அவற்றுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல தர மதிப்பீட்டு விருது களை வழங்கும். இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித பெரிய சுகாதாரக் கேட் டுக்கும் ஆளாகாத உணவகங் களுக்கு வெண்கல விருது வழங் கப்படும். அதேபோல நல்லதொரு சுகா தார முறையை ஐந்தாண்டு களுக்குத் தொடர்ந்து பின்பற்றும் உணவகங்களுக்கு வெள்ளி விருதும் அதனையே பத்தாண் டுகளுக்குக் கடைப்பிடிக்கும் உணவகங்களுக்கு தங்க விரு தும் வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது உணவுக் கடை களுக்கு ஏ, பி, சி, டி என்னும் தரம் ஆண்டுதோறும் மதிப்பீட் டுக்குப் பிறகு வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நடைமுறை கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து நடப் பில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதி நில வரப்படி கிட்டத்தட்ட 99 விழுக் காடு உணவுக் கடை உரிமதாரர் கள் 'ஏ' அல்லது 'பி' தரத்தைப் பெற்றனர். கடந்த 2006ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 77 விழுக்காடு அதிகம்.

மேலும் செய்திகள்