சென்னை: தூத்துக்குடியில் நடத் தப்பட்ட துப்பாக்கிச்சூடு மத்திய பாஜக அரசின் ஆசியுடன் நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் தூத்துக்குடியில் வன்முறை வெடித்து, கலவரம் மூண்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அரசு கூறுவது உண்மை என்றால் பேரணியில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய மேதா பட்கர், தமிழக அரசின் செயல்பாடு மோச மாக உள்ளதாகச் சாடினார். "மக்கள் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கூறியது உண்மை என நிரூபணமாகி உள்ளது.
"மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பிய வேல்முருகன், மன்சூர் அலிகான், பியூஸ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். இதுபோன்ற நடவடிக்கை களை அரசு கைவிட வேண்டும்," என மேதா பட்கர் வலியுறுத்தினார். ஜெயலலிதா ஆட்சியில் கூட இல்லாத அளவிற்கு முதல்வர் பழனிசாமி மக்கள் போராட்டங்களை காவல்துறை கொண்டு ஒடுக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக அரசுக்கு மக்கள் சரி யான பாடம் புகட்டுவர் என்றார். நீண்ட காலமாகத் திட்டமிட்டே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மேதா பட்கர் சாடினார்.
மேதா பட்கர். படம்: ஊடகம்

