கண்ணாடிக் குவளைகள் மீது அமர்ந்து யோகா செய்த மாணவி

கண்ணாடிக் குவளைகள் மீது அமர்ந்து யோகா செய்த மாணவி

1 mins read
03afec91-342b-44a5-9b35-0cfdccfd1c78
-

கண்ணாடிக் குவளைகள் மீது அமர்ந்து 13 வயது சிறுமி செய்த யோகாசனம் திருவண்ணாமலை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே இந்நிகழ்வு நடைபெற்றது. அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் கல்பனா என்ற அந்த மாணவி இயற்கையைப் பாதுகாக்க வலியுறுத்தி இவ்வாறு யோகாசனம் செய்தார். கடந்த ஓராண்டாக யோகாசனப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் கல்பனா, கண்ணாடிக் குவளைகள் மீது அமர்ந்து சுமார் அரை மணி நேரம் யோகாசனம் செய்ததை நேரில் கண்ட அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். பத்மாசனம் எனும் யோகா முத்திரையை தாம் செய்து காட்டியதாகத் தெரிவித்த கல்பனாவுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்று மேலும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என அவர் கல்பனாவை உற்சாகப்படுத்தினார். படம்: தமிழக ஊடகம்

மேலும் செய்திகள்