நாகை: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. நாகையைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இரு படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இரு படகுகளையும் மடக்கிய இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கியதுடன் மீன்பிடி வலைகளையும் அறுத்தெரிந்துள்ளனர். மேலும் படகுகளில் இருந்த ஐஸ்கட்டிகளை எடுத்து மீனவர்களின் தலையில் வைத்ததுடன், உயர் அழுத்த மின்கம்பிகளைக் கொண்டும் அடித்துள்ளனர்.
மீனவர்கள் மீது கடற்படை தாக்கு
1 mins read

