இந்தோனீசிய படகு விபத்தில் 180 பேரைக் காணவில்லை

இந்தோனீசிய படகு விபத்தில் 180 பேரைக் காணவில்லை

1 mins read

டிகாரஸ்: இந்தோனீசியப் படகு விபத்தில் சிக்கியோரில் 180 பேரைக் காணவில்லை என்று கூறப்படுவதால் பலியானவர் களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப் படுகிறது. கடந்த திங்கட்கிழமை இந் தோனீசியாவின் வடக்கு சுமத்ரா வில் டோபா ஏரியில் படகு கவிழ்ந்தது. முதலில் 80 பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதில் 180 பேர் பயணம் செய்ததாக இந்தோனீசிய அதிகா ரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும் இந்த எண்ணிக் கையானது படகில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

மோசமான வானிலை காரண மாகவும் பயணிகளின் எண் ணிக்கை அதிகமாக இருந்த தாலும் படகு விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 18 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தண்ணீருக்கு அடியில் தேடும் பணி நேற்று முடுக்கிவிடப்பட்டது. விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், காணாமல் போனவர்களைப் பற்றி அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்