தூத்துக்குடியில் போலிஸ் அத்துமீறல்கள்

தூத்துக்குடியில் போலிஸ் அத்துமீறல்கள்

1 mins read

நெல்லை: துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் காவல்துறை தூத்துக்குடியில் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், இத்தகைய அத்துமீறல்களைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பொதுக்கூட் டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் விதித்த நிபந்த னைகளை மீறிப் பொதுக்கூட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் புகார் எழுப்பியுள்ளது காவல்துறை. "இதையடுத்துக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த கட்சியின் மாவட்டச் செயலர் மீதும், அதில் பங்கேற்றவர்கள் மீதும் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்," என்று பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். காவல்துறையினரின் இந்தப் பழிவாங்கும் போக்கை வன்மை யாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்