பணியிட மாறுதல் உத்தரவு பெற்ற ஆசிரியர்: கண்ணீர் விட்டு தடுத்த மாணவர்கள்

பணியிட மாறுதல் உத்தரவு பெற்ற ஆசிரியர்: கண்ணீர் விட்டு தடுத்த மாணவர்கள்

2 mins read
efdffbd6-06e8-4daa-9bd8-ad080fdda18a
-

திருவள்ளூர்: ஆங்கில ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றுச் செல்வதை ஏற்கமுடியாத மாண வர்கள் அவரை அனுப்ப மறுத்துக் கெஞ்சிக் கதறிய காட்சி திரு வள்ளூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் அன்பைக் கண்டு அந்த இளம் ஆசிரியரும் கண்ணீர் விட்டார். பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரிய ராகப் பணியாற்றி வந்தார் பகவான். மாணவ மாணவிகளுடன் ஒரு சக தோழனாகப் பழகியதுடன் பாடம் எடுப்பதில் காட்டிய அணுகு முறையும் அவர்மீது மாணவர்க ளுக்கு மரியாதையை ஏற்படுத்தி யது. மாணவர்களிடம் அவர் மிக கண்ணியமாகவும் பாசமாகவும் பழகியதாக சக ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர்.

விரைவில் அப்பள்ளி மாண வர்களுக்கு ஆங்கிலம் மிகவும் பிடித்தமான பாடமாக மாறிப் போனது. இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கு வதற்கு ஆசிரியர் பகவான் முக்கியக் காரணமானார். இந்நிலையில் பணியிட மாறு தல் பெற்ற பகவான் இதற்கான உத்தரவைப் பெற பள்ளிக்கு வந்தபோது தகவல் அறிந்த மாண வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பள்ளியை விட்டுப் போகக்கூடாது என மன்றாடினர். பல மாணவர்கள் பகவானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண் ணீர் விட்டதால் அவரும் நெக் குருகிப் போனார். ஒரு கட்டத்தில் ஆசிரியரை அனுப்ப மறுத்த மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன் அமர்ந்து அழுதனர். இதைக் கண்டு பகவானும் கண் ணீர் விட்டார்.

வானை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு பள்ளி கல்வித்துறை நிறுத்தி வைத்துள் ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. இதை அறிந்து பகவானின் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

மாணவர்களுடன் ஆசிரியர் பகவான். படம்: தமிழக ஊடகம்

மேலும் செய்திகள்