சோழர் காலத்தில் கோயில் நிலம் ஏலத்தில் விற்பனை; சைவ மடங்களுக்கு நிலம் நன்கொடை

சோழர் காலத்தில் கோயில் நிலம் ஏலத்தில் விற்பனை; சைவ மடங்களுக்கு நிலம் நன்கொடை

1 mins read
7618d141-eb87-4310-a349-97ce0f7661c8
-

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் 6ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கூட கிடைக்கின்றன. இந்நிலையில், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் ஆர். அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராம சாமி கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவர் டாக்டர் எம்.நளினி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் கல்வெட்டு களை ஆய்வு செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த ஆய்வில், இந்தக் கோயிலில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு சோழர் கால கல்வெட்டை அவர்கள் கண்டுபிடித்தனர். 10=12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பொறிக் கப்பட்டது. அந்தக் காலத்தில் திருநாவுக் கரசர், திருஞான சம்பந்தர் ஆகி யோர் பெயரில் இரு சைவ மடங் கள் இருந்ததாகவும் அவற்றுக்கும் கூத்தபெருமாள்நல்லூரில் உள்ள திருவுடை நாயனார் கோயிலுக்கும் நிலம் வழங்கப்பட்டதாகவும் அக் கல்வெட்டு மூலம் தெரிகிறது.

மேலும் செய்திகள்