ஈரானிய கொள்ளையரைப் பிடிக்க கர்நாடகாவில் தமிழக போலிஸ்

1 mins read

சென்னை: சென்னை நகரில் நகை வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்களைப் பிடிக்க தமிழக போலிசார் கர்நாடகா விரைந்துள்ளனர். சென்னையில் சென்ற மாதம் ஒரே நாளில் 12 வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்தன. மாதர்களிடமிருந்து நகைகள் பறிக்கப்பட்டன. கர்நாடகாவில் பீடார் என்ற பகுதியில் ஈரானியர்கள் அதிகம். குண்டர்கள், ஒரு காரில் எல்லை கடந்து தமிழ்நாட்டுக்குள் வந்து அங்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றைப் பயன்படுத்தி பலரிடத்திலும் நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டு தங்கள் காரில் தப்பிச் சென்றுவிடுவார்கள். இதுவரை ஐந்து பேர் கைதாகி இருக்கிறார்கள். விரைவில் பலரும் சிக்குவர் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்