மன்னிப்பு கேட்ட போலிஸ்

மன்னிப்பு கேட்ட போலிஸ்

1 mins read
2add5048-1f24-45f6-9217-1509817b9f9e
-

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் என்ற இடத்தில் உள்ள பாஜீரா குர்த் கிராமத்தைச் சேர்ந்த காசிம், 45, இவரது நண் பர் சமைதீன், 55, ஆகிய இரு வரும் கடந்த புதன்கிழமை அவர் களது வயலுக்குச் சென்றபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் இருவரும் பசுவை கொலை செய்ய போவதாக வதந்தி பரப்பியதால் தடியுடன் வந்த ஒரு கும்பல் அவர்களை கடுமையாகத் தாக்கியது.

இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அவர்களுக்கு தண்ணீர்கூட கொடுக்கப்படவில்லை. இதில் படுகாயம் அடைந்த காசிம் இறந் தார். அவரது நண்பர் சமைதீன் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினார். காசிம், சமைதீனின் உற வினர்கள் தகவலறிந்து அங்கு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே காவல்துறையினர் கும்பலிட மிருந்து சமைதீனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் இரு வரையும் தாக்கிய 25 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினர் முன்னிலையில் காயம் அடைந்தவர் இழுத்துச் செல்லப்பட்ட படம் சமூக ஊடங்களில் பரவி புயலைக் கிளப்பியிருக்கிறது. படம்: இந்திய ஊடகம்

மேலும் செய்திகள்