சிறையில் மன்சூர் அலிகான் பட்டினி

சிறையில் மன்சூர் அலிகான் பட்டினி

1 mins read

சேலம்: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை-=சேலம் இடையே 8 வழிப் பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதையடுத்துக் கடந்த 14ஆம் தேதி போலிசார் அவரைக் கைது செய்தனர். தமக்குப் பிணை வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் மன்சூர் அலிகான்.