80 விழுக்காட்டிற்கும் மேல் ஊழல் நடக்கிறது: நீதிபதிகள் வேதனை

80 விழுக்காட்டிற்கும் மேல் ஊழல் நடக்கிறது: நீதிபதிகள் வேதனை

1 mins read

மதுரை: மணல் குவாரிகள் தொடர்பான நடவடிக்கைகளில் 80 விழுக்காட்டிற்கும் மேல் ஊழல் இருப்பதாக உயர் நீதிமன்ற நீதி பதிகள் வேதனை தெரிவித்துள் ளனர். அரசு மண் குவாரிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள குவாரிக ளில் முறைகேடுகள் நடந்திருப்ப தாகத் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜாமணி புகார் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இரு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் குவாரிகளிலும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும், அனுமதி பெறா மல் சில குவாரிகள் செயல்படுவதும், முறைகேடாக மணல் அள்ளப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத் தப்படுவதும் விரிவான ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு முறைகேடு நடை பெற்ற காலத்தில் குறிப்பிட்ட இரு அதிகாரிகள் பணியில் இருந்த தாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த இரு அதிகாரிகளும் முறை கேடு மூலம் சம்பாதித்த பணத்தில் பல இடங்களில் பல்வேறு சொத் துக்களை வாங்கிக் குவித்துள்ள தாகக் குற்றம் சாட்டியுள்ளார்.