முதல்வராக ரகசிய யாகம்

முதல்வராக ரகசிய யாகம்

1 mins read
d6359fe2-9c0f-4792-a815-1fd183486bf8
-

திருவரங்கம்: உலகப் புகழ்பெற்ற திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மஞ்சள் திலகமிட்டு வரவேற்கப்பட்ட சம்பவத்தின் பின் னணியில் ரகசிய யாகம் நடத்தப் பட்டதாக தகவல் வெளியாகியுள் ளது. திரு ஸ்டாலின் முதல்வராவதற் காக சுக்ர ப்ரீத்தி யாகம் நடந்த தாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை திமுக தலைமை மறுக்கவோ ஆமோதிக்க வோ இல்லை. சென்ற வெள்ளிக்கிழமை அன்று திருவரங்கத்தில் கட்சியினர் இல்லத் திருமண விழாவில் பங் கேற்க வந்த மு.க. ஸ்டாலின் வழியில் ரெங்கநாதர் கோயிலுக்கு சென்றார்.

அப்போது கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையிலான குழுவினர் ஸ்டாலினை உற்சாக மாக வரவேற்றனர். பின்னர் ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற பொன்னாடை அணிவிக்கப் பட்டது. ஏற்கெனவே பெருமாளிடம் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மாலை, மஞ்சள் பிரசாதம் போன்ற வை அவரிடம் வழங்கப்பட்டன. மேலும் சுந்தர் பட்டர் வேத மந் திரங்களை உச்சரித்தபடி ஸ்டாலி னின் நெற்றியில் மஞ்சள் திலக மிட்டு ஆசி வழங்கினார். இதனைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், உடன டியாக தனது நெற்றியில் வைக்கப் பட்ட மஞ்சள் பொட்டை கைகளால் துடைத்துக்கொண்டார்.

திருவரங்கம் கோயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்ட மு.க.ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம்