சென்னை-சேலம் விரைவுச் சாலைக்கு நிலம் வழங்கிய மூவருக்கு நிலப்பட்டா; எதிர்ப்பு குறைகிறது

சென்னை-சேலம் விரைவுச் சாலைக்கு நிலம் வழங்கிய மூவருக்கு நிலப்பட்டா; எதிர்ப்பு குறைகிறது

2 mins read
88d22489-b7d9-4677-abba-77c9835a7e81
-

சென்னை: சேலம்-சென்னை எட்டுத் தட விரைவுச் சாலை அமைக்கப்படுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரி வித்துள்ள வேளையில் நிலம் வழங்கிய மூவருக்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பாராட்டியுள் ளார். மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் எட்டுத் தட பசுமை சாலை அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சட்டமன்றத்தில் அறி விக்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, காஞ்சீபுரம் வழி யாக சென்னை வரை 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விரைவுச் சாலை அமைக்கப் படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கோயில்கள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் கைய கப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு கடும் எதிப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எட்டுத் தட சாலைக்காக நிலத்தை அளந்து கல் அமைக்கும் பணி கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் பசுமை சாலைக்கு நிலம் வழங்கிய ஷோபனா, பூங் கொடி, மணிமேகலை ஆகிய மூவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார். விரைவுச் சாலை அமைக்கப் படுவது குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, "எட்டுத்தட பசுமை சாலை திட்டத்திற்காக கை யகப்படுத்தும் நிலங்களில் சுமார் 400 ஹெக்டெர் நிலம் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் என்பதால் மிக குறைவான எண்ணிக்கை யிலே வீடுகள், கட்டடங்கள் பாதிக் கப்படும்," என்றார்.

பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரிய இழப்பீடுகளுக்கு ஏற்பாடு செய்யும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. படம்: தமிழக ஊடகம்