நாமக்கல்: ரொட்டிக் கடைக்குள் லாரி ஒன்று புகுந்த விபத்தில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் வள்ளிபுரம் அருகே சென்று கொண்டிருந்த அந்த லாரி, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இயங்கிவந்த ரொட்டிக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்தக் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ரொட்டிக் கடைக்குள் புகுந்த லாரி: வாடிக்கையாளர் பரிதாப பலி
1 mins read

