அமைச்சர்கள் களையெடுப்பு: முதல்வர் பழனிசாமி அதிரடி நடவடிக்கை

அமைச்சர்கள் களையெடுப்பு: முதல்வர் பழனிசாமி அதிரடி நடவடிக்கை

1 mins read
4dd8157c-94f3-4dc7-9617-e18052998b7a
-

சென்னை: அமைச்சர்கள் சிலரை நீக்குவது என்றும், புதியவர்க ளுக்குச் சில பொறுப்புகளை அளிப்பது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தக வல் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்ப இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பு ஆளும் தரப்புக்கு நிம்மதி அளித் துள்ளது. இதையடுத்துச் சில அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ள முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

சில அமைச்சர்களின் செயல்பாடுகள் அவருக்கு அதிருப்தி அளித்திருப்பதாகவும், அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை 9ஆம் தேதி முடிவடைந்த பின்னர் சரிவரச் செயல்படாத அமைச்சர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவர் என அச்செய்தியில் கூறப்பட் டுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோரின் பதவிகளுக்குப் பாதிப்பு வரலாம் என்ற கூறப்படும் நிலையில், ராஜன் செல்லப்பா, இன்பதுரை உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாவட்டச் செயலர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் 12 பேருக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும்