இளம் கிராண்ட் மாஸ்டர்: சென்னை சிறுவனின் சாதனை

இளம் கிராண்ட் மாஸ்டர்: சென்னை சிறுவனின் சாதனை

1 mins read
9c90c785-e40e-43b5-98a4-3043707fe095
-

சென்னையைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா சதுரங்கப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான். இதையடுத்து இச்சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இத்தாலியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா 9ஆவது சுற்றின் முடிவில் 2,500 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் அவனுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைத்துள்ளது.

இந்தியாவின ஆக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையுடன், உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளான் இச்சிறுவன். கடந்த 2013ஆம் ஆண்டு 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் அடுத்து 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்கு உண்டு. படம்: தமிழக தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்