விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய நால்வர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஒருவரின் அக்கா உணவில் விஷம் வைத்ததே மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து சிவகாசி நகர போலிசார் விசாரணை நடத்தியதில், மது குடித்து உயிரிழந்த முருகன், 25 என்பவரின் அக்கா, கோழிக்கறி சமைத்து அதில் விஷத்தை கலந்து வைத்திருந்ததாகவும் அதனை முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதால் நால்வர் பலியானதும் தெரிய வந்துள்ளது. முருகனின் அக்காவிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சகோதரன் முருகனைக் கொல்லவே விஷம் கலந்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நால்வர் பலி; சகோதரனைக் கொல்ல உணவில் விஷம் வைத்த சகோதரி
1 mins read

