போலி ஏடிஎம் அட்டை தயாரித்து மோசடி: மேலும் மூவர் கைது

1 mins read

சென்னை: போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மூவர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 11 பேரைக் கைது செய்து போலிசார் விசாரித்து வந்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சந்துரு போலிசில் சிக்காத நிலையில், தமக்கும் இந்த மோசடிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில் மோசடியில் தொடர்புடைய மேலும் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்