ஈரோடு: தமிழகக் காவல்துறையினர் ரவுடிகள் போல் செயல்படுவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார். போலிசார் ரவுடிகளைப் போல் மிரட்டுவதை ஏற்க இயலாது என் றும் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். திமுகவிலிருந்து விலகியுள்ள 3,000 பேர் அமமுகவில் இணைவதையொட்டி இந்த நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறப்பட்டதாக தினகரன் குறிப்பிட்டார்.
"இந்த நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆளும் தரப்பும் போலிசாரும் முட்டுக்கட்டை போட்டனர். "நிகழ்ச்சியில் பங்கேற்க வந்து கொண்டிருந்தபோது ஈரோடு காவல்துறை துணைக்கண் காணிப்பாளர் என்னிடம் வந்து, 'முதல்வர் இதே பாதையில் வந்து கொண்டிருப்பதால் நீங்கள் காலம் தாழ்த்திச் செல்லுங்கள்' என்று சொன்னதுடன் நிற்காமல் சாலை யின் குறுக்கே போலிஸ் வாக னங்களை நிறுத்தி வைத்து எங்க ளுக்கு வழிவிட மறுத்தார்," என்று புகார் எழுப்பினார் தினகரன். ரவுடிகள்தான் இதுபோன்று சாலையை மறித்து மிரட்டுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், அந்த வேலையைக் காவல்துறையே செய்தால் எப்படி ஏற்கமுடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

