புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்குப் பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந் தையிடம் வரதட்சணையாக கேட்டு பெற்றுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்தவர் சரோஜ் காந்த் பிஸ்வால் (33). அம்மாநிலத் தின் கேந்திரபாரா பகுதியிலுள்ள பாலா பகதர்பூர் கிராமத்தில் வசிக் கும் இவர் தனது திருமணத்துக்குப் பெண் தேடினார். இறுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மி ரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணை யாக பணம், நகை வேண்டாம் என்று கூறியுள்ளார். இது மட்டு மல்லாமல் ஆடம்பரமான பூ அலங்காரம், பந்தல் அலங்காரம், வானவேடிக்கை எனச் செலவு செய்யாமல் திருமணத்தை எளி மையாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குப் பதிலாக திருமணத் தன்று தனக்கு 1,001 மரக்கன்று களைத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் திருமணத்துக்குச் சம்மதித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்=ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திரு மணத்தின்போது தான் ஏற்கெ னவே ஒப்புக்கொண்டபடி மணமக ளின் தந்தை ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளைக் கொண்டு வந்து ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் கொடுத்தார். அவற்றைக் கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர் பிஸ்வால் 'மரம் நண்பன்' என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார்.
தனது திருமணத்தின் மூலம் மக்களிடையே மரம் வளர்க்கும் ஆர்வத்தை தூண்டிய ஒடிசா ஆசிரியர் பிஸ்வால். படம்: ஊடகம்

