கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, மயக்கம்

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, மயக்கம்

1 mins read

அமராவதி: ஆந்திராவின் புருடிவாரிபள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் காலை ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட் டது. பிரசாதத்தைச் சாப்பிட்டோரில் பெண்கள், குழந்தைகள் என 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே பிலேரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் பிரசாதம் தயாரிக்கப் பட்டதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்