மும்பை: கொட்டித் தீர்த்த மழைக்கு நால்வர் பலி

மும்பை: கொட்டித் தீர்த்த மழைக்கு நால்வர் பலி

1 mins read
4bba12a6-743a-46ea-89e5-39d65a9f2861
-

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் தானேவில் விடிய °விடிய கொட்டித் தீர்த்த மழைக்கு சிறுவர் கள் உட்பட நால்வர் பலியாகினர். கனமழை காரணமாக மும்பை யில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் நேற்று முன்தினம் மாலை மரம் விழுந்த தில் இருவர் உயிரிழந்தனர். எவர்சையின் நகர் பகுதியில் 15 வயது சிறுவன் திறந்த சாக் கடையில் விழுந்து உயிரிழந்தான். தானே மாவட்டம் வடோல்கான் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த தில் 15 வயது சிறுவன் கிரண் உயிரிழந்தான்.

இதற்கிடையே, வாடாலா பகுதி யில் உள்ள லயாட்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பின் கார் நிறுத்தத் தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு கார்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து அக்குடி யிருப்பில் வசித்த 200 பேர் வெளி யேற்றப்பட்டனர். உயிர் சேதம் எதுவுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இக்குடியிருப்பை ஒட்டி தோஸ்தி கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுள்ள கட்டடப் பணி களால், அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்ட தாக குடியிருப்பாளர்கள் கூறுகின் றனர். இதுதொடர்பாக, தோஸ்தி கட்டுமான நிறுவனத்தின் உரிமை யாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி மேற்கொள்ளப் பட்டுள்ள கட்டுமானப் பணியால் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அந்த கார் நிறுத்தத்தில் இருந்த ஆறு கார்கள் சேதமடைந்தன.

மேலும் செய்திகள்