வைகோ: வரம்பு மீறுகிறார் ஆளுநர்

வைகோ: வரம்பு மீறுகிறார் ஆளுநர்

1 mins read

சென்னை: தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும் நடவடிக்கைகளையும் தமிழக ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஒரு போட்டி அரசாங்கம் நடத்த மத்திய அரசு முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஆளுநர்கள் இதுவரை பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகள் அனைத்தையும் ஆளுநர் பன்வாரிலால் மீறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, ஆளுநரின் இந்தப் போக்கைக் கண்டித்து, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையின் அடிப்படையில் திமுகவினர் அமைதி வழியில் அறப்போர் நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.