எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
12d242f5-2963-4c02-81d7-8faebd8e195b
-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மாற்றக்கோரி அதிமுக வின் 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். ஆனால் அந்த எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந் தனர். இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது.

18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கியது செல்லும் என்றும் அவர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேநேரம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங் கினார்.

இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றா வது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமித்தார்.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தங்க தமிழ்ச் செல்வன் நீங்கலாக 17 எம்எல் ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் இவ்வாரம் திங்கட்கிழமை புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.