புதுடெல்லி: மத்திய அரசின் மகப்பேறு கால விடுமுறை அதி கரிப்பு திட்டத்தால் 18 லட்சம் பெண்களுக்கு வேலையை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேலை வாய்ப்பு ஆலோசனை நிறு வனமான டீம்லீஸ் வெளியிட் டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. மகப்பேறு கால விடுப்பால் நடப்பு ஆண்டிலேயே சுமார் 18 லட்சம் பெண்களுக்கு வேலை தேடுவதில் சிக்கலை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. 10 துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தியாவில் 27% பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.
அரசு, தனியார் துறையில் பணியாற்றும் மகளிருக்காக ஊதி யத்துடனான மகப்பேறு விடுமுறை யின் கால அளவை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக மத்திய அரசு உயர்த்தியது. இந்தச் சட்டம் கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்து இந்தியா வில் கொண்டுவரப்படுகிறது என் றும் அதில் கூறப்பட்டுள்ளது. 26 வார மகப்பேறு கால விடு முறைக்காக பெண்களுக்குச் செலுத்தும் சம்பளம் முதலாளி களுக்கு ஒரு சுமையாகக் கருதப் படுகிறது. அது பெண்களுக்கு வேலைகளில் பரவலான சம்பள வெட்டுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களுக் கான வேலை வாய்ப்புகளைக் குறைத்துவிட்டதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

