அகமதாபாத்: அகமதாபாத்தில் குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி பிச்சை எடுத்த பெண் ஒருவரை போவோர் வருவோர் எல்லாம் பொது இடத்தில் சரமாரியாக அடித்துக் கொன்றுள்ளனர். அதிர்ச்சியூட்டும் இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குழந்தைகளைக் கடத்தும் நோக்கத்துடன் நான்கு பெண்கள் ஊடுருவியுள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த சாந்திபென் என்ற பெண் அஹமதாபாத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று அவர் வழக்கம்போல் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தபோது ஒரு சிலர் அவரை சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
குழந்தை கடத்த வந்ததாகக் கூறி பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்
1 mins read

