விவாகரத்தானாலும் குடும்பத்தை பராமரிப்பது கணவரின் கடமை

விவாகரத்தானாலும் குடும்பத்தை பராமரிப்பது கணவரின் கடமை

1 mins read

புதுடெல்லி: குடும்ப வன்முறை வழக்கு ஒன்றில் எதிர் மனுதாரர் (மனைவி) வேலையில்லாமல் உள்ளதால் மனைவி, மகன் ஆகிய இருவரையும் பராமரிப்பது குடும் பத் தலைவரின் கடமை. எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை வழக்குக்கு எதிராக கூடுதல் செஷன்ஸ் நீதி மன்றத்தில் குடும்பத் தலைவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மாதம் ரூ. 40,000 வருவாய் ஈட்டுகிறேன், வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனவே, ஜீவனாம்ச தொகையை ரூ.15,000த்தில் இருந்து ரூ.10,000 ஆக குறைத்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.