12 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி

12 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி

1 mins read

சென்னை: மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவர்கள் இடம் பெற்றனர். முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும் 1,001=3,000 வரை 8 பேரும் 3,001=5,000 வரை 16 பேரும் 5,001=10,000 வரை 76 பேரும் 10,001=15,000 வரை 157 பேரும் 15,001= 25,000 வரை 1,059 பேரும் இடம்பெற்றனர். இருப்பினும் முதல் 3,000 இடங்களைப் பெற்ற 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் கூறியது.